Wednesday, July 17, 2019

Tatkal Ticket Booking: ரயில் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணத்தை திரும்ப பெறலாம்...: ஆனால்....?

Tatkal Ticket Booking: ரயில் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணத்தை திரும்ப பெறலாம்...: ஆனால்....? 


IRCTC Tatkal Ticket Reservation Charges and Time : ரயில் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தால், சில சமயங்களில் நமக்கு பணத்தை திரும்ப பெறும் வசதி உள்ளது. ஆனால், அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. IRCTC இணையதளம் மற்றும் செயலியின் மூலம், நாம் ரயில் பயணம் செய்ய, டிக்கெட்களை முன்பதிவு செய்துகொண்டு செல்கிறோம். இந்த இணையதளம் மற்றும் செயலியின் மூலமே, நாம் தட்கல் டிக்கெட்களையும் முன்பதிவு செய்ய முடியும். ரயில் பயணத்திற்கு ஒருநாள் முன்னதாகவே, நாம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யமுடியும். காலை 10 மணிமுதல் ஏசி ரயில்களுக்கும், 11 மணி முதல் மற்ற ரயில்களிலும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். 


தட்கல் டிக்கெட்டின் விலை, மற்ற சாதாரண ரயில் டிக்கெட் கட்டணத்தை விட 30 சதவீதம் கூடுதலாகவும், படுக்கை வசதி கொண்ட ரயிலின் டிக்கெட் கட்டணத்தை விட 10 சதவீதம் அதிகமாக இருக்கும். train journey, tatkal class, tatkal ticket, tatkal ticket booking தட்கல் முறையில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டால், பணம் திரும்ப பெறமுடிவதில்லை என்று பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். டிக்கெட் விலையும் அதிகம், அதை கேன்சல் செய்தால், 


சிறிது பணம் கூட, திரும்ப கிடைப்பதில்லை என்று பலர் புலம்புவதை நாம் நேரில் பார்த்திருக்கலாம். தட்கல் முறையில் உறுதியான டிக்கெட்களை கேன்சல் செய்தால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணத்தை திரும்ப பெற முடியும். தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் திரும்ப பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ரயில் 3 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்படுதல் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுதல், அதன்காரணமாக பயணி பயணம் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், பயணி ஏறும் மற்றும் இறங்கும் இடம் இடம்பெறாத சூழ்நிலை பயணி, தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது கேட்டிருந்த வகுப்பு, ரயில்பெட்டியில் இல்லாத சூழ்நிலை. உயர்வகுப்பு கேட்டு முன்பதிவு செய்த பயணி, தனது டிக்கெட்டை ரத்து செய்தல். உயர் வகுப்பு கேட்டு முன்பதிவு செய்த பயணி, 

அது கிடைக்காததால், கீழ் வகுப்பில் பயணம் செய்தால், அந்த வகுப்பிற்கு ஏற்ற தட்கல் கட்டணம் மற்றும் பயண கட்டணம் திரும்ப வழங்கப்படும் தட்கல் வகுப்பில் பயணம் மேற்கொள்வோர், பயணத்தின்போது தங்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை எப்போதும் தங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
Disqus Comments