Wednesday, October 9, 2019

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க... இன்று பலரும் கம்ப்யூட்டரில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறோம். பலரது வாழ்க்கையே கம்ப்யூட்டரில் தான் உள்ளது. எப்படி வேலையில் கம்ப்யூட்டர் முக்கியமானதோ, அப்படி தான் உடலில் கண்கள் மிகவும் முக்கியமானது. 



பார்வை இல்லாமல் வாழும் வாழ்க்கையை சற்று யோசித்துப் பாருங்கள். கொடுமையாக இருக்கும் தானே? எனவே ஒவ்வொருவரும் தங்களின் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தற்போது பெரும்பாலானோருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு காரணம் டிஜிட்டல் சாதனங்கள் தான். 


அந்த சாதனங்களின் மீதுள்ள ஆசையால், நாள் முழுவதும் அந்த சாதனங்களை பார்த்தவாறு இருக்கிறோம். குறிப்பாக இன்று பலர் சமூக வலைத்தளங்களில் 24 மணிநேரமும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான பழக்கம். சொல்லப்போனால் இது ஒருவிதமான போதை என்றும் கூறலாம். MOST READ: யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா? இன்று உலக பார்வை தினம் என்பதால், தமிழ் போல்ட் ஸ்கை கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. 


அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், பார்வைப் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க... கண் பரிசோதனை கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள், அடிக்கடி கண்களை சோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக கம்ப்யூட்டர் பயன்பாட்டினால் தலைவலி, மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளை சந்தித்தால், உடனே கண்களை பரிசோதிக்க வேண்டும். 


 நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க... திரையைப் பார்க்கும் நேரம் திரையைப் பார்க்கும் நேரம் என்று வரும் போது, அதில் கம்ப்யூட்டர் மட்டுமின்றி மொபைல் திரையைப் பார்க்கும் நேரமும் அடங்கும். எனவே தேவையில்லாமல் ஸ்மார்ட் சாதனங்களைப் பார்க்காதீர்கள். மேலும் இரவு தூங்குவதற்கு குறைந்தது 1 மணிநேரத்திற்கு முன்பிருந்தே, இந்த சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். இதனால் இரவு நேரங்களில் கண்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும்.நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க... 


வெளிச்சம் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தை எப்போதும் குறைத்துக் கொள்ளுங்கள். மிகவும் பிரகாசமான வெளிச்சம் கொண்ட திரையை நீண்ட நேரம் பார்த்தால், கண்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இதன் விளைவாக கண் சம்பந்தமான பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். எனவே எந்த ஒரு சாதனத்தையும் பயன்படுத்துவதாக இருந்தால், மிதமான வெளிச்சத்தில் வைத்து பயன்படுத்துங்கள்.நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? 


கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க... 20-20-20 விதி நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்கலாம். அம்மாதிரியான நேரங்களில், 20-20-20 விதியைப் பின்பற்றுங்கள். அதாவது 20 நொடி இடைவேளையை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கொடுப்பதுடன், 20 அடி தொலைவில் உள்ள பொருளையும் காண வேண்டும். இது கண்களுக்கு மட்டும் நல்லதல்ல, ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது.நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க... நடை மற்றும் பேச்சு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, அவ்வப்போது இடைவேளை எடுக்க வேண்டியது அவசியம். அதுவும் அடிக்கடி எழுந்து சிறிது தூரம் நடந்து சென்று நண்பர்களுடன் சிறிது உரையாடி, பின் மீண்டும் வேலை செய்வதால், 



கண்களுக்கு ரிலாக்ஸ் கிடைப்பதோடு, ஒட்டு மொத்த உடலும் சற்று ரிலாக்ஸ் ஆகும்.வராமலிருக்க இத படிங்க... கண் பயிற்சி உடல் ஆரோக்கியமாக இருக்க எப்படி தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ, அதேப் போல் கண்கள் ஆரோக்கியமாக இருக்க கண் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படி தினமும் கண் பயிற்சிகளை மேற்கொண்டால், பார்வை மேம்படுவதோடு, கண் பிரச்சனைகளில் இருந்தும் விலகி இருக்கலாம்.
Disqus Comments